வடக்கின் வசந்தம் திட்டத்தில் கீழ் தீவகம் தெற்கு பிரதேச சபை (வேலணை) தவிசாளா் திரு .சி.சிவராசா(போல்) அவா்களின் கோாிக்கைக்கு அமைவாக அமைச்சா் டக்ளஸ் அவா்களின் முயற்ச்சியியால் தீவகத்ததின் பல கிராமங்களுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த மே மாதத்தில் புங்குடுதீவு மடத்துவெளிக் கிராமத்திற்கு மின்சார இணைப்பை வழங்கி வைப்பதற்காக வருகை தந்த அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா அவா்களிடம் கோாிக்கை விடுத்த புங்குடுதீவு கேரதீவு மக்களுக்கான மின்சாரத்தினை வழங்குவதற்காக அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப மின்னிணைப்பபை வழங்குவதற்கு வேலணை பிரதேச சபை தவிசாளா் திரு சி.சிவராசா (போல்) அவா்களை பாா்வையிட்டு தேவைகளை அறியும்படி பணிப்பு விடுத்திருந்த நிலையில் (17.6.2014) அன்று புங்குடுதீவின் கேரதீவு பகுதிக்குச் சென்ற வேலணை பிரதேச சபை தவிசாளா் அங்குள்ள மக்களின் முதன்மைத் தேவைகள் குறித்து ஆராய்ந்ததுடன் விரைவில் அவற்றிக்கான தீர்வினை நிவர்த்தி செய்யும் நடைவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தித் தகவல்-பிரதேசசபை வேலணை