முன் ஒரு காலத்தில் தீவகத்தில் மண்டைதீவு முதல் நெடுந்தீவு வரை- விவசாயிகள் கால்நடைகளை பட்டியில் அடைத்து பராமரித்து பலன் அடைந்து வந்தனர்.
அப்படியிருந்த நிலமை தற்போது தலைகீழாக மாறியிருக்கின்றது.காலநிலை மாற்றத்தினாலும் -மனிதர்களின் மனமாற்றத்தினாலும்-இப்போது பட்டியும் இல்லை பட்டியில் அடைப்பதற்கு மாடுகளும் இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது.
தீவகத்தில் இதற்கு விதிவிலக்காக புளியங்கூடல் பகுதியில் விவசாயி ஒருவர் 25க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை பட்டியில் அடைத்து பராமரித்து பலன் பெற்று வருவதுடன்அப்பகுதிக்கான பால்ச்சேவையினையும் வழங்கி வருகின்றார்.
புளியங்கூடல் சந்தியிலிருந்து 800 மீற்றர் தொலைவில் சுருவில் செல்லும் பிரதான வீதிக்கருகிலேயே இந்த மாட்டுப்பட்டி அமைந்துள்ளது.
பார்ப்பதற்கு அருதாகிப் போன மாடுகளையும்- மாட்டுப் பட்டியினையும் -எமது வாசகர்களின் பார்வைக்காக கீழே பதிவு செய்து செய்துள்ளோம்.
வேலணையில் பணியாற்றும் கால்நடை வைத்தியரினால் -மாடு வளர்ப்போருக்கான கருத்தரங்கு ஒன்று அண்மையில் வேலணையில் நடைபெற்றதாகவும்-இவர்களுக்கு மாடு வளர்ப்பது தொடர்பான கையேடு ஒன்று வழங்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.