பரிசில் நடைபெற்ற-மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

_DSC2282

மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திரு-திருமதி நடராஜா செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற தருமநாயகம்  ( தருமு) திருமதி தருமநாயகம் பஞ்சரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியுமாகிய,செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வைபவம்- 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

நட்புரீதியாக திரு சிறீதரன் அவர்கள் விடுத்த  வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையம் மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் பதிவு செய்த -வீடியோ இணைப்பினை உலகமெல்லாம் பரந்து வாழும் உறவினர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.

அறப்பணிச்சிறப்பு

தமது அன்புப் புதல்வியின்  பூப்புனித நீராட்டு விழாவினை சிறப்பாக  நடத்தி அழகு பார்த்த தம்பதிகளான திரு திருமதி சிறீதரன்  சுபாஜினி  அவர்கள்-அன்றைய நாளில் வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினை தத்தெடுத்து அவர்களுக்கான நிதியினை  வழங்கியிருந்ததுடன்-அதற்கான ஆதாரத்தினை -மேடையில் வைத்து  திரு அரியம் மாஸ்ரர்  அவர்களிடமிருந்து  பெற்றுக் கொண்ட நிகழ்வு- பூப்புனித நீராட்டு விழாவிற்கு மேலும் தனிச்சிறப்பு   சேர்த்ததுடன்-இப்படியான  கொண்டாட்டங்களை  நடத்தும் எம்மவர்களுக்கு  ஓர் எடுத்துக்காட்டாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்தது.

செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவினை பகுதி-01 பகுதி -02 என இரண்டு பிரிவாக கீழே இணைத்துள்ளோம் என்பதனை அறியத்தருகின்றோம்

 
Sinthuja Puberty Ceremony Part 2 par allaiyoor

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux