சுனாமி போர் அனர்த்த நிரந்தர வீட்டுத்திட்டத்தின் கீழ்-உதவி வழங்கும் நிறுவனங்களின் நிதியுதவியுடன்-அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பிரமாண்டமான புதிய குடியேற்றத்திட்டத்தின் அடிப்படை வசதிகள் யாவும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடக்கத்தில் 70 வீடுகளே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட குருநகர் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்த போதிலும்-தற்போது மேலதிகமான குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு மக்கள் செறிவாக குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகளான மின்சாரம்-குடிநீர் வசதிகளுடன் – மேலும் மழலைகள் பள்ளி-திறந்த வெளி கலையரங்கம் வியாபார நிலையங்கள் என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இக்குடியிருப்புக்குச் செல்லும் பிரதான வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இப்புதிய குடியிருப்புக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளதால்-தீவகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் குடியேற்றப்பட்ட முதலாவது பெரிய குடியிருப்பாக -அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் குடியிருப்புத் திட்டம் விளங்குவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.