வேலணை மேற்கு பெரியபுலம் மஹாகணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 2014 ஆனிமாதம் 2 ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது என்பதனை புலம்பெயர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
இத்திருவிழாவினை முன்னிட்டு முடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி- வேலணை பிரதேசசபையினால் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதி சிரமதானமூலம் அண்மையில் துப்பரவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.