அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடிதண்ணீரினை வழங்கி வந்த ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த, நீர்த்தாங்கி பழுதடைந்ததைத் தொடந்து -அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைப் பொருத்த உதவிடுமாறு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் எம்-நவரட்ணராஜா அவர்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்றும்-இங்கு கல்வி பயிலும் மழலைகளின் நலன் கருதியும் -மழலைகளுக்கான குடிதண்ணீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாகவும்-அல்லையூர் இணையம் நீர்த்தாங்கியினை அமைப்பதற்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளது.
குடிதண்ணீரினை சுத்திகரிக்கும் பில்ரர் ஒன்றும் அண்மையில் எம்மால் இம்மழலைகளுக்காக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லைப்பிட்டியில் மூன்று பாலர் பாடசாலைகள் இயங்கி வருவதுடன்-மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்படும் இந்தப்பாடசாலையிலேயே அதிகளவான( 33 )மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்