தீவகம் மண்கும்பான் பகுதியில் நயினாதீவுக்குச் செல்லும் யாத்திரிகள் இளைப்பாறிச் செல்வதற்கான ஓய்வு மண்டபம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த வருடம் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே!
அன்று நடைபெற்ற-அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதிகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததும் நீங்கள் அறிந்ததே!தற்போது இந்த ஓய்வு மண்டபம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐம்பது மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த ஓய்வு மண்டபத்தினால்-தென்னிலங்கையிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும் தீவகத்திற்கு வருகை தரும் உல்லாசப்பயணிகள் பெரிதும் பயனடைவர் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.