மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பழுகாமம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் 94 பெற்றோர்களை இழந்த மாணவிகள் வசிக்கின்றார்கள்-இவர்கள் இக்கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் ஒன்றில் தொடர்ந்து கல்வி கற்று வருவதாகவும் இவர்களுக்கு நாளொன்றுக்கு மூன்று நேர உணவுக்கான நிதி 20 ஆயிரம் ரூபாக்கள் வரை தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த செய்தியினைப் பார்வையிட்ட நாம் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிலைமைகளை கேட்டறிந்தோம்.
இந்த மகளிர் இல்லத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் முதலாவது நிகழ்வாக-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவாவின் புதல்வி நந்தனா,வின் 11வது பிறந்த நாளை 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக இங்கு நடத்தினோம்.
தொடர்ந்தும் இந்த மகளிர் இல்ல மாணவிகளுக்கு அல்லையூர் இணையம் உதவிடும் என்று உறுதியளித்துள்ளோம்.
அல்லையூர் இணையம் இதுவரை உங்கள் பேராதரவோடு 50க்கும் மேற்பட்ட இப்படியான அறப்பணியினை நடத்தியுள்ளதுடன்-தொடர்ந்தும் எம்மாலான அறப்பணிச் சேவையினை ஆற்றவுள்ளோம் என்பதனையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
இந்நிகழ்வினை சிறப்பாக நடத்துவதற்கு முன்னின்று உதவிய-மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வோல்ரன் கருணைராஜ் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.