தீவகத்தில் பல வருடங்களுக்கு முன்னர் பணப்பயிராக கருதப்பட்ட- புகையிலையினை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வந்தனர்-
காலமாற்றம் மற்றும் விலைவாசி ஏற்றம் எனப் பல காரணிகளினால்- தீவகத்தில் புகையிலைச் செய்கை முற்றாக வீழ்ச்சி கண்டது.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகள் புகையிலைச் செய்கையினை மேற் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தீவகத்தில் இம்முறை-நெற்செய்கையிலும் சரி-புகையிலைச் செய்கையிலும் சரி அனலைதீவு விவசாயிகளே முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தின் வாசகர்களுக்காக-பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படங்கள்-அனலை திரு அவர்கள்