உங்கட பிள்ளையள் எங்க போகினம்…யாழ் வலம்புரியில்

வெளிநாட்டில இருக்கிறவர்கள்-குளிரிலும்,பனியிலும், சாப்பிட்டும்,சாப்பிடாமலும் தம்மை வருத்தி உழைத்துஊருக்கு பணம் அனுப்பி வைக்க -அங்கு இருப்பவர்களோ! வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது . என்றமமதையோடு,காசைத் தண்ணியாய் செலவுசெய்து மறுபடியும்-மறுபடியும்-போன்பண்ணி………….யாழ் குடாநாட்டின் கலாசார சீரழிவுகள் குறித்து பலரும் வேதனை வெளியிட்டு வருகின்றனர்.சிலரோ ஐயா! என்ன கலாசார சீரழிவு. எல் லாம் முன்பும் நடந்த விடயங்கள்தான். நாம் மறந்து விட்டோம் அவ்வளவுதான் என்று ஆறுதல் அடைகின்றனர்.இருந்தும் எங்களின் களநிலை, கலாசார சீரழிவை தூண்டுபவையாக இருப்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.


ஏ-9 பாதை திறந்த பின்னான இரவு நேரப்பயணம், புலிப்பயத்திலிருந்து நீங்கிக் கொண்டமை, இரவுநேர இசைக்கச்சேரிகள் , தென்பகுதி மக்களின் அதீத வருகை, விடுதிகளின் பெருக்கம் என்பவை கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத்துவதற்கு ஊக்கம் தருகின்றன.

இதேவேளை தியேட்டர்களிலும் இச்சீரழிவுகள் தாண்டவமாடுவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது குறித்தும் நாம் கவன மற்றவர்களாக இருக்க முடியாது.எனவே கலாசார சீரழிவுகளை தடுத்து- தவிர்த்து எங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு ஆரோக் கியமாகவும் எங்கள் தமிழ்ப் பண்பாட்டின் உன்ன தமான குடும்ப உறவு சீராகவும் அமைவதற்கான வழிவகைகளைச் செய்வது கட்டாயமானதாகும்.

அதேநேரம் கலாசாரச் சீரழிவு என்பதின் பின்னணியில் அறியாமையும் தவறான வழிநடத் தல்களும் குடும்ப சமூகப் பின்னணிகளும், சந்தர்ப் பங்களும் துணைபுரிவதை மறுத்துவிட முடியாது.

ஆக , கலாசாரச் சீரழிவு என்பதனை தடுக்க-தவிர்க்க வேண்டுமாயின், ஒட்டுமொத்த கலாசாரச் சீரழிவு என்று குழம்பிக்கொள்ளாமல் அதனை கூறுபோட்டுப் பார்க்கும் போது பெற்றோர்கள் தங் கள் பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாக இருப் பது கலாசாரச் சீரழிவை வேரறுக்க ஒரே வழி என்ற முடிபு தெரியவரும். ஆகவே முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பில் “நம்பிக்கை” அடிப்படையில் எல்லாம் சரியாக நடக்கும் என்று எண்ணிக்கொள்ளாமல்,

மேற்பார்வையும், கட்டுப்பாடும் அதேசமயம் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளின் உன்ன தமான நண்பர்களாகவும் இருக்கும் பன்மைத் துவ பங்களிப்பை முறையாகச் செய்யவேண்டும்.என்னுடைய பிள்ளை ரியூசனுக்கு செல்கிறது, என்னுடைய பிள்ளைக்கு ரியூசனுக்கான நேரம் ஒழுங்கில்லை.அதனால் அந்தப்பிள்ளையும் உரிய நேரத்துக்கு வீடு திரும்ப முடிவதில்லை என்ற நினைப்புகளோடு இருப்பது பேராபத்தாகலாம்.

ஆகையால் எதிலும் ஒருகண் இருந்தால், வாழ்வு குறையாத மகிழ்வைத் தரும். பிள்ளை களும் தங்கள் பெற்றோர் தங்களை வளர்த்த சீர் சிறப்பை பெருமையாகக் கூறி தாமும் தம்பிள் ளைகளின் வளர்ப்பில் அந்த முறையை பிர யோகிப்பர். இதுவன்றோ பேரானந்தம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux