அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-கைதடி முதியோர் இல்லத்தில் வசித்தவருமாகிய-திருமதி தங்கத்துரை சுந்தரலட்சுமி (சுந்தரி) அவர்கள் 17-05-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான-ஏரம்பு பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும்-காலஞ்சென்ற தங்கத்துரையின் அன்பு மனைவியும்- தவநாயகம் -காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் சிவலிங்கம்- நாகம்மா-தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்-காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் கிஸ்ணமூர்த்தி (சிறி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்-விஜயன்,வித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 18-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பின்னர் அன்னாரின் பூதவுடல் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களினை-உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.