யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விளங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன. இவற்றிலே பன்னிரண்டு அம்மன் ஆலயங்களாக இருந்த போதிலும் அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்களாக காலப்போக்கிலே மாற்றமடைந்துவிட்டன. கண்ணகை அம்பாள், குறிகட்டுவான் மனோண்மணி அம்பாள், முத்துமாரி அம்பாள், காளிகா பரமேஸ்வரி அம்பாள், மாவுதிடல் மலையடி நாச்சியார், கள்ளிக்காடு துர்க்கை அம்பாள், பட்டயக்கார அம்பாள், கண்ணகிபுரம் பத்திரகாளி அம்பாள், பிட்டிவயல் நாச்சிமார், இத்தியடி நாச்சிமார் (நாகபூசணி அம்பாள்) என்பனவே ஏனைய பத்து சக்தி பீடங்களுமாம்.
இவற்றுள்ளே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே சிறக்கப்பெற்று வரலாற்றுச்சிறப்புமிக்கதாய் புங்குடுதீவின் தெற்கு கடற்கரையோரத்தில் ஏறத்தாள ஆயிரம் பரப்பு நிலத்திலே அமைந்துள்ள ஆலயம் தான் கண்ணகை அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.
இவ்வளவு சிறப்பு பெற்ற-கண்ணகை அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழா 13-05-2014 செவ்வாய்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.