மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் முதலாம் ஆண்டு (10-05-2014)நினைவு தினத்தை முன்னிட்டு-அன்னாரின் திதிக்கிரியைகள் லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது-
லண்டன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் திதிக்கிரியைகள் நடைபெற்ற,அதே நேரம் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில் -பிரார்த்தனை நிகழ்வுடன் மாணவர்களுக்கு மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.
அன்னாரின் முதலாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற-இந்த இரண்டு நிகழ்வின் நிழற்படங்களை-உங்களின் பார்வைக்கு கீழே பதிவு செய்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-எல்லாம் வல்ல மண்டைதீவு சாம்பலடி கண்ணகை அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.
யாழ் தின்னவேலியில்………
லண்டன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில்…….