யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை அமைக்கப்பட்டு வரும் காபட் வீதியின் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது.
அதி உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய வீதி அகலப்படுத்தப்படும் பணிகள் நடைபெறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் வீதி பல இடங்களில் இடைமறிக்கப்பட்டு சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன.
வாகனங்களின் போக்குவரத்துக்காக-அருகிலேயே மாற்றுவழியும் அமைக்கப்பட்டுள்ளது.
21 மாத கால ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்டு வரும் வீதி அகலப்படுத்தும் பணிகள் இவ்வருடக் கடைசியில் நிறைவு பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட சில படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
இப்படங்கள் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலும்-மண்டைதீவுச் சந்திக்கு அருகாமையிலும் எடுக்கப்பட்டவையாகும்.
காபட் வீதியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்-யாழ் பண்ணையிலிருந்து-அல்லைப்பிட்டி சந்தி வரை 8நிமிடங்களில் கடந்து விடமுடியும் என்று hotel ஒன்று விளம்பரம் செய்துள்ளது.