தீவககத்தில் சா்வதேச ஆங்கிலப் பாடசாலையொன்று முதல்முறையாக வேலணையில் திறந்து வைக்கப்ட்டது. 01.05.2014 வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இப்பாடசாலையினை E-city கல்வி நிலையத்தின் chairman திரு ஜெயச்சந்திரமூா்த்தி றஜீவன் அவா்களும் வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்களும் திறந்து வைத்தா்கள் .
கலைமகள் கல்வி நிலையத்தின் உதவிப்பணிப்பாளா் சிந்து மயூரன் அவா்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக E-city கல்வி நிலையத்தின் chairman திரு ஜெயச்சந்திரமூா்த்தி றஜீவன் அவா்களும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகட்சி வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிழவராசா போல் அவா்களும் கௌரவ விருந்தினா்களாக கிராம சேவையாளா் பரமேஸ்வரன் அவா்களும் ஓய்வுபெற்ற ஆசிாியா் திசாநாயகம் அவா்களும் கலந்து சிறப்பித்தாா்கள் அத்தோடு ஆசிாியா்களும் மாணவா்களும் பெருமளவான பெற்றோா்களும் கலந்து சிறப்பித்தார்கள்.