தீவகம் தெற்கு பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 01.04.2014 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல்இரண்டு மணிக்கு அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் மைதானத்தில் வேலணை பிரதேச செயலா் திருமதி மஞ்சுளாதேவி சதீஸன் அவா்களின் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரமத விருந்தினராக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திாி அலெஸ்ரின் அவா்கள் கலந்து கொண்டதுடன் வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்களும்-ஊர்காவற்றுறை காவல் நிலைய ஆய்வாளர் W.MVL.வீரசிங்க மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
100 மீற்றர்-200 மீற்றர்-4தர 100 மீற்றர் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளுடன் கிரிகெற் போட்டியும் அதைத் தொடர்ந்து உதைபந்தாட்டமும் நடைபெற்றது.
உதைபந்தாட்ட இறுதிப்போட்டியானது புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக் கழகத்திற்கும் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற போது- மத்தியஸ்தத்தில் பக்கச்சாா்பான நடவடிக்கையினை நடுவர் மேற்கொண்டதாக கூறி-நடுவரின் சென்பிலிப்ஸ் விளையாட்டு வீரா்கள் அவாின் தீா்பை ஏற்க மறுத்ததால் போட்டியில் குழப்பநிலை ஏற்பட்டு உதைபந்தாட்டப்போட்டி கைவிடப்பட்டதாக விளையாட்டு உத்தியோகத்தா் அறிவித்தாா்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!