மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கொண்டு -விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டுவரும் ஏழுதள இராஜகோபுரத்தின் முதற்கட்ட நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்-வரும் 06-04-2014 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவம் நிறைவடைந்ததும்-இரண்டாம் கட்ட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்-குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இராஜகோபுரத்தை அமைத்து வரும்-வடமாகாணத்தில் பிரபலமான ஸ்தபதி சிற்பக சிந்தாமணி அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்) அவர்கள் எமது இணையத்திற்கு நேரடியாகத் தெரிவித்தார்.
