இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.புனித அந்தோனியாரின் பெருநாள் விழாவினை புலம்பெயர் மக்கள் பார்த்து மகிழ்திடவேண்டும் என்ற நோக்கோடு பல சிரமங்களுக்கு மத்தியிலும்-அந்தோனியாரின் கருணையுடன்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்காக எடுத்து வந்துள்ளோம்.
தவிர்க்க முடியாத காரணத்தால் பெருநாள் விழாவினை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை-ஆனாலும் ஒருபகுதி நிழற்படங்களை-கடந்த ஞாயிறு அன்று பதிவு செய்திருந்தோம்.அதன் தொடர்ச்சியாக மிகுதிப்படங்களை-உங்களின் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம் என்பதனை பணிவோடு அறியத்தருகின்றோம்.