இப்படங்களை உங்கள் பார்வைக்கு எடுத்து வருவதற்கு உண்டான செலவினை-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் வழங்கியிருந்தார்-
அத்தோடு தனது கால் வலியினையும் பொருட்படுத்தாது-படகில் முதல்நாள் சென்று மறுநாள் மாலைவரை நின்று 100க்கும் அதிகமான படங்களை பதிவு செய்து எடுத்து வந்து எமக்கு அனுப்பிவைத்த -திரு .வி.குரு அவர்களுக்கும் உங்கள் சார்பில் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட-பாலைதீவு புனித அந்தோனியாரின் பெருநாள் திருப்பலிப்பூசையினை-யாழ் மறைமாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள் ஒப்புக்கொடுத்ததாகவும்-பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை-கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!