வேலணை வங்களாவடியில் மிகப்பிரமாண்டமாக நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள -வேலணை பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டுமாடிக் கட்டிடம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கட்டிடத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும்-மின்சார இணைப்பும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.வேலணை வைத்தியசாலைக்கு எதிர்ப்பக்கம் அமைந்துள்ள-இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் அல்லையூர் இணையத்திற்குச் சொந்தமானவை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.