அல்லைப்பிட்டி முதல்-கனடா வரை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நம்ம ஊர் விவசாயிகளில் சிலர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதல்-கனடா வரை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நம்ம ஊர் விவசாயிகளில் சிலர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

299143_233728100023378_1696254552_nல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் தலைசிறந்த விவசாயிகளாக வலம்வந்த நம்மவர்கள் பலபேர் புலம்பெயர்ந்து -தாம் வாழ்கின்ற பல  நாடுகளில்  தமது வீட்டுத் தோட்டங்களில்  விவசாயத்தை மேற்கொண்டு அக மகிழ்ந்து வருகின்றார்கள் என்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் நீங்கள் காணலாம்.

கீழே இணைக்கப்பட்டுள்ள  படங்களில் தோன்றுபவர்கள்-

01-அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியில் வாழ்ந்து மறைந்த-அனுபவவிவசாயியான-அமரர் அண்ணாவியார் முத்து தில்லைநாதன் அவர்களுடைய மூத்த புதல்வர் திரு தில்லைநாதன் பத்மநாதன் அவர்கள்-இவரும் தந்தையின் வழியில் தலைசிறந்த விவசாயியாக இன்றும் அல்லைப்பிட்டியில் வாழ்ந்து வருபவர்.

02-அல்லைப்பிட்டியில் வசித்து வரும் மூத்த விவசாயியான திரு இரசலிங்கம் (செட்டி) அவர்களின் வழிகாட்டலில் அவரது பிள்ளைகளால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தின் இன்றைய காட்சியே அடுத்து இணைக்கப்பட்டுள்ள படங்களாகும்.

03-டென்மார்கில் வசிக்கும்-அமரர் முத்து தில்லைநாதன் அவர்களின் மூன்றாவது புதல்வர் திரு பரஞ்சோதிநாதன் அவர்களினால் தமது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தினை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

04-கனடா வன்கூவரில் வசிக்கும்-திரு அருளானந்தம் அவர்கள்-ஒரு காலத்தில் அல்லைப்பிட்டியில் சிறந்த விவசாயியாக வலம் வந்தவர்-இன்றும் கனடாவில் சுறுசுறுப்புடன் தமது வீட்டுத் தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடுவதை கீழே உள்ள படங்களில் காணலாம்.

05-நியூசிலாந்தில் தமது வீட்டுத் தோட்டத்தில் குரங்குவால் பயப்பங்காய் முதல் கீரை வரை பயிரிட்டு நண்பர்களுக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்ந்து வருகின்றார்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த.சின்னத்தம்பி கதீஸ்வரன் அவர்கள்-அவரின் பயத்தங்கொடிப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இறுதியாக-அல்லைப்பிட்டியில் விவசாயம் செய்வது மிக அரிதாகி விட்டாலும்-புலம்பெயர்ந்து வாழும் எம்கிராம விவசாயிகளால்  முழுமையாக விவசாயத்தை மறக்க முடியாது என்பதற்கான சிறு எடுத்துக்காட்டே இப்பதிவாகும்.
305424_233728420023346_98587346_n 1898247_290182694468414_229065887_n 1798795_290211567798860_1298105115_n 1898247_290182697801747_959822639_n 1898247_290182701135080_742125742_n 1911742_290211564465527_160965850_n 378724_415653401830846_937093092_n 227008_578187122244139_406731380_n 68282_578187548910763_1418504006_n 481114_578187205577464_1331951349_n 999578_578187468910771_1192508136_n 999068_578187572244094_1348511675_n 999434_10201453605718977_232933117_n 1174780_10201453605438970_2072425251_n 1176321_10201453598038785_614691951_n 1170709_10201453618719302_1112408391_n 1186163_10201453591118612_273931332_n image-7cd03d551a079d44e024a937e88ac3bf4849d0d85b7676f0c2d328ff8a9d1279-V image-76093eca8ffb87b55ad13000c5092a4c71d78b13134ccd80f3d3c2501af154bc-V image-e52edcef75a0bf3c7cbe256506dada1d581940e04f8961bb965a36b5e35596bc-V image-f25da8f60bd70f8f3d04103b4e7ea41b104c5a232f3117c16e1edf4e697a8735-V

388595_233728310023357_1650940370_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux