அல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் அதிக உச்ச விளைச்சலை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கிய-விவசாய நிலங்களை-காலத்தின் தேவை கருதி அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான-விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்காக-நிர்ணய விலை அடிப்படையில் விற்பதற்கு இப்பகுதி விவசாயிகள் முன் வந்திருப்பதாக எமது இணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு அருகினில் அமைந்துள்ள-விவசாயநிலங்களே -விளையாட்டு மைதானமாக மாற்றப்படவுள்ளதாகவும்-இதனை பாடசாலைக்கு விலைகொடுத்து வாங்கிக் கொடுப்பதற்கு-இப்பாடசாலையின் புலம்பெயர் நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் -மற்றும் இப்பாடசாலையின் மீது அக்கறையுள்ளவர்களும் இணைந்து உதவிட முன் வருமாறு பாடசாலை அதிபரினால் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
காலத்தின் தேவை கருதி மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்-ஆனால் ஒரு காலத்தில் விவசாயம் செய்வதற்கு இடம் தேடி அலைந்தனர் இப்பகுதி விவசாயிகள் ஆனால் இன்று……மனம் அந்த பசுமையான கடந்த காலங்களை நினைத்து ஏங்கி நிற்கின்றது.