வேலணை பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவிட முன்வருமாறு அழைக்கின்றார்-வேலணை பிரதேசசபை தவிசாளர்-விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவிட முன்வருமாறு அழைக்கின்றார்-வேலணை பிரதேசசபை தவிசாளர்-விபரங்கள் இணைப்பு!

அனைத்து வேலணை வாழ் உறவுகளுக்கும் வேலணையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எனது உறவுகளுக்கும் வேலணை பிரதேசத்தில் பற்றுள்ள உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள் !

PICT0067

வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட-மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புங்குடுதீவு-நயினாதீவு ஆகிய கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவிட முன்வருமாறு-புலம்பெயர் நாடுகளில் வாழும் இப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்-வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள்-அவர் விடுத்த வேண்டுகோளின் முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தித்திக்கு கைகொடுத்துதவுங்கள் !!

வேலணை மக்களுக்கும் தீவகத்தைச்சேர்ந்த ஆனாலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் வேலணை( தீவகம் தெற்கு) மீது பற்றுள்ளம் கொன்டவர்களுக்கும் அன்பான ஒரு வேண்டுகோள்.

எமது தீவகம் தெற்கு ( வேலணை) பிரதேசமானது பிரதேச சபையினால் 05 உப அலுவலகங்களாக ( மண்டைதீவு,அல்லைப்பிட்டி,வேலணை,புங்குடுதீவு,நயினாதீவு) போன்ற உப அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு காணப்படுகின்றது
தற்போது பிரதேச சபை தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்த பின்பும் அரசாங்கம் வழங்கும் நிதியைக் கொண்டே சில குறிப்பிடக்கூடிய அபிவிருத்தி வேலைகளைச் செய்யதோம் சில வேலைத்திட்டங்கள் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தீவிர முயற்சியினால் செய்யப்படுகின்றன ஆனாலும் தீவகம் பரந்த பிரதேசமாக காணப்படுகின்றமையால்- எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்தாலும் சிறு வேலைகளாகவே காணப்படுகின்றது அத்தோடு வேலணை பிரதேசத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதாலும் நாங்கள் குடிநீரை பலத்த சிரமத்தின் மத்தியில் வழங்கி வருகின்றோம் இருப்பினும் எமது சேவைகளை சிறப்பாய் செய்வதற்கு போதிய வசதிகளற்று காணப்படுகின்றது -மக்கள் சேவையினை நிறைவாய்ச் செய்வதற்கு தங்களின் உதவியினை எதிர்பார்க்கின்றோம்
உதவிகளை செய்து வேலணை பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளின்  வளர்ச்சிக்கு உதவிட முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சி.சிவராசா(போல்)
தவிசாளர்,
பிரதேச சபை,வேலணை.

 

1471377_1387097678207799_1681729865_n

பிரதேச வளர்ச்சிக்கு உதவ விரும்புவர்கள் +94 0779054396 என்ற இலக்கத்துடன் தொடப்பு கொள்ளவும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux