யாழ் புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா 18.01.2014 காலை 9.00மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் உயர்திரு. கலைநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் உயர்திரு. இ.இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு.சி.சத்தியசீலன் அவர்களும், வடமாகாண கல்விப் பணிப்பாளர் உயர்திரு.வ.செல்வராசா அவர்களும், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களும் பாடசாலை ஸ்தாபகரின் புதல்வனான வைத்தியக் கலாநிதி வி;.கனகரத்தினம் அவர்களும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனான லண்டனைச்சேர்ந்த குரு.கு.வி பஞ்சலிங்கம் அவர்களும் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி நாகபூசணி கிருஸ்ணன் அவர்களும் பழைய மாணவனான பிரான்ஸைச் சேர்ந்த திரு.க சிவகரன் ஓய்வு நிலை அதிபரான திரு.சோ.குலசிங்கம் அவர்களும் பழைய மாணவனான திரு.க.தேவதாஸ் அவர்களும் விசேட அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களும் இவ்விழாவில் பங்கு கொண்டு-அங்கு வெளியிடப்பட்ட நூல் ஒன்றின் மீது ஆய்வுரை நிகழ்த்தியதாகவும் அறிய முடிகின்றது.