அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும்-வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும்-லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,திருமதி அன்னலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 21-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-01-2014 புதன்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தின் நிழற்படப்பிடிப்பாளர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை-உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்களின் பார்வைக்கும்-வேண்டுகோளின் பேரிலிலும் பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம்.
இறுதி நிகழ்வுகளின் வீடியோப் பதிவு சில தினங்களில் இணைக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
அன்னார்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு-மற்றும் திருமதி சண்முகதாசன் லீலா-திருமதி பாலன் உதயா-மற்றும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் செல்லையா சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் என்பதனையும் அறியத்தருகின்றோம்.