பிரான்சின் புறநகர்ப்பகுதியான ARGENTEUIL இல் மிகச்சிறப்பாக தமிழ்ப்பணி ஆற்றிவரும் ARGENTEUIL தமிழ்ச்சங்கத்தினால் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.இங்கு நடத்தப்பட்ட-தைப்பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக argenteuil நகர மேயர் திரு philippe Doucet அவர்கள் வருகை தந்து இறுதிவரை இருந்து சிறப்பித்துள்ளார்கள்.தமிழர் பண்பாட்டினை எடுத்துக்காட்டும் விதமாக நடைபெற்ற-இந்த பொங்கல் விழாவில் தமிழ்ச்சங்க மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.அத்தோடு தமிழரின் உணவுகளும் நகரமேயர் உட்பட அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களில்-குறிப்பாக நகரமேயரை-பொட்டுவைத்து வரவேற்பவர் எங்கள் அல்லைப்பிட்டிகிராமத்தைச் சேர்ந்த திரு திருமதி விமலராஜா புஸ்பம் அவர்களின் புதல்வர் ஆவார்.என்பதனை பெருமையோடு அறியத்தருகின்றோம்