அல்லைப்பிட்டியில் திங்கட்கிழமை அன்று அகாலமரணமான-யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி இரட்ணேஸ்வரன் வித்தியா(அம்முக்குட்டி)அவர்களின் இறுதி நிகழ்வுகள் 21-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக-யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகமான பொதுமக்கள் அல்லைப்பிட்டியில் குவிந்தனர்.அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்ற-சமய இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து அன்னாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு -அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
