இந்த வருடம் அல்லைப்பிட்டி தீவகம் உட்பட பருவகாலம் தப்பி பெய்த மழையால் நெற்செய்கை அழிவுக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு காலத்தில் நெல் பயிரிடுவதற்கு வயல் நிலங்கள் போதாமையினால் விவசாயிகள் அந்தரித்த நிலைமைகள் மாறி-இன்று பல காரணங்களுக்காக ஒரு சில விவசாயிகளே நெற்செய்கையினை மேற்கொண்ட போதும்-வருணபகவான் கருணைமழை பொழியாது விட்டமையால் நெற்பயிர்களை கால்நடைகளை மேய்வதற்கு விடவேண்டிய கொடுமை நிகழ்ந்ததாக-பாதிக்கப்பட்ட அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் நெற்செய்கையாளர்களுக்கு பயனேதும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.