அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் மாலைநேரவகுப்பு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா-21-12-2013 சனிக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தின் நிதி அனுசரணையுடன்-போதகர் கருணைராஜ் அவர்களின் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த-பல்கலைக்கழக மற்றும் உயர்தரம் கற்கும் மாணவ-மாணவிகளின் ஒத்துழைப்புடன் இவ்விழா-மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. நீண்டகாலத்தின் பின்னர் இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும்-அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் நடத்தப்பட்ட-பிரமாண்டமான விழாவாக இது அமைந்துள்ளது.
நிதி வழங்கிய நல் உள்ளங்கள்
திரு வியாகரத்தினம் சௌந்தரராஜன்(சாந்தன் நோர்வே)-20 ஆயிரம் ரூபாக்கள்
திரு ஏகாம்பரம் மனோகரன் (லண்டன்)18 ஆயிரம் ரூபாக்கள்
திரு செல்லையா சிவா பிரான்ஸ்-22 ஆயிரம் ரூபாக்கள்
மொத்தம்-60 ஆயிரம் ரூபாக்கள் அல்லையூர் இணையத்தினால் இவ்விழாவிற்காக வழங்கப்பட்டது என்பதனை புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.