
இத்திறப்பு விழா அன்று மாலை 5.30 மணிக்கு, யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினராக தியாகேந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆரியகுளம் எனப்பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் நினைவுக்கற்களும் மூன்று மொழிகளில் திரை நீக்கம் செய்யப்பட்டன.
ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்துக்கான நிதியுதவி வழங்கிய தியாகி அறக்கொடை நம்பிக்கைப் பொறுப்பாளர் வாமதேவன் தியாகேந்திரனுக்கு அறக்கொடை அரசன் என்ற விருதினை, யாழ் மாநகர சபை வழங்கி கௌரவித்தது.
திறப்பு விழாவின் பின்னர் வாண வேடிக்கைகள், வர்ண தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிழற்படத் தொகுப்பு-செல்வன் ஜங்கரன் சிவசாந்தன்-யாழ்ப்பாணம்























