அமரர்   திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,முன்னெடுக்கப்பட்ட அறப்பணியும்,நன்றி நவிலலும் இணைப்பு!

அமரர் திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,முன்னெடுக்கப்பட்ட அறப்பணியும்,நன்றி நவிலலும் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்கள் கடந்த மாதம் 26.07.2021 அன்று மண்கும்பானில் காலமானார்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு தினம் 24.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று மண்கும்பானில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

அமரர் திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,மூன்று இடங்களில் அன்னதானப்பணிகளும்,மேலும் மண்கும்பானில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அமரர் திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

நன்றி நவிலல்

எமது துயரத்தில் நேரில் பங்குகொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமரர் திருமதி இராசம்மா பேரம்பலம் அவர்களின் குடும்பத்தினர் -மண்கும்பான்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux