அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சுப்பிரமணியம் செல்வரட்ணம்(S.S)அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு….

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சுப்பிரமணியம் செல்வரட்ணம்(S.S)அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு….

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட திரு சுப்பிரமணியம் செல்வரட்ணம் (எஸ்.எஸ்)அவர்கள் 25.07.2021 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுதினம் 24.08.2021செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றதுடன் மேலும் அன்னாரின் நினைவாக,அவரது சகோதரர் திரு எ.ஸ்.இராசலிங்கம் (எஸ்..ஆர்)அவர்களின் நிதி அனுசரணையில்,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,வவுனியா சிவன் முதியோர் இல்ல முதியவர்களுக்கும்,கிளிநொச்சி மலையாளபுரத்தில் அமைந்துள்ள,விஷேட தேவைக்குட்பட்ட தெய்வக்குழந்தைகளுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி மூன்றுமுடி கருமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி..

அமரர் சுப்பிரமணியம் செல்வரட்ணம் (எஸ்.எஸ்)அவர்களுடன்-கடந்த வருடம் மாசி மாதம் எடுத்துக்கொண்ட நிழற்படங்களின் தொகுப்பு கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux