அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவா செல்லையா அவர்களின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு,02.07.2021 வெள்ளிக்கிழமை அன்று தாயகத்தில்,அம்பாறை,மட்டக்களப்பு,வவுனியா,கிளிநொச்சி,மண்டைதீவு,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அறப்பணி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதுபற்றியவிபரங்கள் கீழேஇணைக்கப்பட்டுள்ளது.

01-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னைக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

02-கிளிநொச்சி தருமபுரத்தில் அமைந்துள்ள, நமசிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும், மூத்தோர்களுக்கு மூன்று நேரச்சிறப்புணவு வழங்கப்பட்டது.

03-லண்டனில் வசிக்கும்,திரு முகுந்தன் குலசிங்கநாதன், மற்றும் பிரான்சில் வசிக்கும்,திரு சிவா செல்லையா ஆகிய, இருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு(ஒரே வயது இல்லை) 02.07.2021வெள்ளிக்கிழமை அன்று – கனடாவில் வசிக்கும்,மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு சி.ஜெயசிங்கம் அவர்களினால்,மண்டைதீவில், முன்னெடுக்கப்பட்டு வரும்,நலிவுற்றோருக்காக, மாதந்தோறும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் யூலை மாதத்திற்கான 70 ஆயிரம் ரூபாய் நிதியினை இருவரும் இணைந்து வழங்கினர்.

04-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு மூன்றுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

05-மட்டக்களப்பில் அமைந்துள்ள ஓசானம் இல்லத்தில் வசிக்கும்,தெய்வக்குழந்தைகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

06-சிவா அன்னதான அறக்கட்டளையின்” ஏற்பாட்டில்,முல்லைத்தீவு சிலாவத்தை கிராமத்தில், மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும்,பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான, வாழ்வாதார உதவியாக, 45 கோழிகள், கோழித்தீவனம், மற்றும் உபகரணம் என்பன 20350.00 ரூபா செலவில் வழங்கி வைக்கப்பட்டது.

07-மட்டக்களப்பில் யாகசம் செய்பவர்களுக்கும்,வீதியோர சிறு வியாபாரிகளுக்கும், சமைத்த உணவு வழங்கப்பட்டது.

08-வவுனியா மாவட்ட செவிப்புலன் அற்றோர் சங்க (30) குடும்ப உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux