பிரான்ஸில் நடைபெற்ற,திருமணவிழாவை முன்னிட்டு,உலர்உணவு,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள்இணைப்பு!

பிரான்ஸில் நடைபெற்ற,திருமணவிழாவை முன்னிட்டு,உலர்உணவு,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள்இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின்” ஏற்பாட்டில்,23.06.2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெற்ற, விக்னேஸ்வரா கார்த்திகா, ஆகிய இருவரும் இணைந்து கொண்ட, திருமண விழாவை முன்னிட்டு,அன்றைய தினம் யாழ் அராலி வட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும், மூத்தோர்கள், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த,15 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி கரடிப்போக்கில் அமைந்துள்ள, விஷேட தேவைக்குட்பட்ட வலுவூட்டல் இல்லத்தில் வசிக்கும்,
தெய்வக் குழந்தைகளுக்கு, மூன்று நேரச்சிறப்புணவும் வழங்கப்பட்டது.

இப்பணிக்கு நிதி வழங்கிய, திரு திருமதி விக்னேஸ்வரா கார்த்திகா தம்பதிகளுக்கு,
இறையாசி வேண்டி, இனிய திருமண நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux