முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த கால போரின் போது கடலில் வீழ்ந்து வெடிக்காத நிலையில் தற்போது வீசும் கடும் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் அலை நிலையின் காரணமாக இக்குண்டு கரை ஒதுங்கியுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux