அல்லைப்பிட்டி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட இந்திரகுமார் அவர்கள் கனகராயன்குளத்தில் கொலையா?விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட இந்திரகுமார் அவர்கள் கனகராயன்குளத்தில் கொலையா?விபரங்கள் படங்கள் இணைப்பு!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில், காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த (22.08.2020)அன்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், சடலத்தை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில், கொலை என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைக்காக, வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

சடலமாக மீட்கப்பட்டவர், அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியை பிறப்பிடமாக் கொண்ட திரு கணபதிப்பிள்ளை இந்திரகுமார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux