யாழில் தீயணைப்பு வாகனம் விபத்து,ஒருவர் பலி,இருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழில் தீயணைப்பு வாகனம் விபத்து,ஒருவர் பலி,இருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று பருத்தித்துறை, மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2020) சற்றமுன் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் அரியரட்ணம் சகாயராஜா (37-வயது) எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux