அல்லைப்பிட்டியில் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!


அல்லைப்பிட்டியில்,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள, தற்போதைய சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு .ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் நிதி அனுசரணையில், அவருடைய தந்தையார் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவாக, வாகீசர் சனசமூக நிலயத்தின் ஏற்பாட்டில்,உலர் உணவுப்பொருட்கள் இன்றைய (01.04.2020)தினம் வழங்கி வைக்கப்பட்டன .

அரிசி,மா,பருப்பு, சீனி, தேயிலை உட்பட்ட பொருட்கள்,பொதிசெய்யப்பட்டு,தெரிவு செய்யப்பட்ட 41 பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பணியில் வாகீசர் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும்,இப்பகுதி இளைஞர்களும் இணைந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux