யாழில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு-படம் இணைப்பு!

யாழில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு-படம் இணைப்பு!

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது.

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம். என அங்கிருந்த பொதுமக்கள் கூறியுள்ளனா். எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux