புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்-விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்-விபரங்கள் இணைப்பு!


தீவகம் புங்குடுதீவு 11 ஆம் வட்டாரப் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று 04.01.2020 சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

குழந்தை பிறந்து 2 நாள்கள் இருக்கும் என்றும் மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது. எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக துண்டான நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (04) காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ள போது சடலத்தை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .

சிசுவின் சடலம் தொடர்பில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux