நயினாதீவு-குறிகட்டுவான் இடையே கடல்பாதையினை  சேவையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நயினாதீவு-குறிகட்டுவான் இடையே கடல்பாதையினை சேவையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நயினாதீவு-குறிகாட்டுவான் இடையே கடல்போக்குவரத்து சேவையில் கடல்பாதையொன்று ( Ferry service ) சேவையில் ஈடுபட்டுவருகின்றது. நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளிற்கும் வசதிவாய்ப்புக்களுடன் கூடிய வடதாரகை, நெடுந்தாரகை , எழுதாரகை படகுகள் சேவையில் உள்ளன.பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் எனப்பலரும் பயன்பெற்றுவருகின்றார்கள்.

ஏனைய தீவுகளோடு ஒப்பிடுகையில் அதிகளவான பயணிகள் நாளாந்தம் செல்லும் இடமாக நயினாதீவு காணப்படுகின்றது.வரலாற்று சிறப்புமிக்க நாகபூசணி அம்மன் ஆலயம்,புத்தர் வருகையோடு தொடர்புடைய நயினாதீவு நாகவிகாரை,பழமையான பள்ளிவாசல்,தேவாலயம் போன்றவையுள்ள சர்வமதசந்நிதியாகவுள்ளமையே காரணங்களாகவுள்ளது.

அரசாங்கத்தால் நயினாதீவு மக்களிற்கு கடல்போக்குவரத்துக்காக படகுசேவை மேற்கொள்ளப்படவில்லை.23/01/2013 முதல் கடல்பாதையொன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை ( RDA ) மூலமாக சேவையிலீடுபடுத்தப்படுகின்றது. குறித்த கடல்பாதையானது வாகனங்களுடன் கட்டடப்பொருட்களை ஏற்றியிறக்கும் சேவையிலே ஈடுபடுத்தப்படுகின்றது.

நயினாதீவு மக்களைப்பொறுத்தமட்டில் அவசரமாக நோயாளிகளை யாழ்ப்பாணக்குடாநாட்டிற்கு கொண்டுசெல்வதானாலும் கடல்மூலமாக 2.9Kmம் தரைமூலமாக 34Kmம் பயணம் செய்யவேண்டியுள்ளது. இவ்வாறாக பல்வேறு தேவைக்காகவும் யாழ்குடாநாட்டிற்கு செல்லவேண்டியுள்ளது.

குறித்த சேவையில் ஈடுபடும் கடல்பாதையினை பொதுமக்களும் பயன்படுத்த உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என மக்கள்கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux