மண்கும்பானில்,விநாயகர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டல்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

மண்கும்பானில்,விநாயகர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டல்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!


தீவகம் மண்கும்பான் விநாயகர் முன்பள்ளிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வேலணை பிரதேச சபை உறுப்பினர் செ .பார்த்தீபன் தலைமையில் கடந்த 27/09/2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மதிப்பிற்குரிய தீவக வலையக்கல்வி பணிப்பாளர் திரு பொ. ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொன்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார் .
அத்துடன் இந்நிகழ்விற்கு தீவக முன்பள்ளிக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர், மற்றும் “வேலனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர் திரு.பிலிப் பிரான்சிஸ் மேலும் ,கிராமசேவையாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் மண்கும்பான் ஆ.த.க பாடசாலையின் அதிபர் . கிராம மட்ட “பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பெற்றோர்கள் மாணவர்கள் ,பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள் .

மண்கும்பானைச் சேர்ந்த, காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – பூமணி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக அவர்களின் உறவினர்களினால் நான்கு பரப்புக் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அத்துடன் இவ்முன்பள்ளிக்கட்டிடம் அமைப்பதற்கு ரூபா 15 லட்சம் ஓதுக்கப்பட்டுள்ளது. இவ்நிதியானது வகுப்பறைகட்டிடம் அமைப்பதற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதால், முன்பள்ளிக்கான சமையல் அறை மற்றும் மலசல கூடம் ,கிணறு, மின்சார இணைப்பு, கட்டிட”உள்ளக வேலைகள் போன்றவை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ,இப்பகுதியைச் சேர்ந்த, புலம்பெயர்ந்த உறவுகள் மற்றும் அனைவரும் இவற்றை மேற்கொள்ள முன்வர வேண்டுமென மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் …..

விநாயகர் முன்பள்ளி”சமூகம்
மண்கும்பான்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux