யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழாவில்-அல்லைப்பிட்டி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழாவில்-அல்லைப்பிட்டி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா  24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவி விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் ஆற்றினர்.

நாவலரும் தமிழ்த்தேசியமும் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ். ஸ்ரீதர்ஷனன் நாவலர் இசையரங்கை வழங்கினார். இதற்கு அணிசெய் கலைஞர்களாக வயிலின் – விரிவுரையாளர் எஸ்.கோபிதாஸ், மிருதங்கம் – விரிவுரையாளர் ச.விமல்சங்கர், கெஞ்சிரா – கலைஞர் எஸ்.செல்வரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். 

நாவலரின் கனவை நனவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அவரது சமயப் பணிகளா? அல்லது தமிழ்ப்பணிகளா? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இதில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களான தி.செல்வமனோகரன், சி.ரமணன், ஆசிரியர் கு.பாலஷண்முகன், மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் பங்கேற்றனர். நாவலர் நினைத்ததைக் காட்டிலும் தமிழ் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் சமயம் அப்படியல்ல. நாவலர் நினைத்த மாற்றங்கள் சமயத்தில் முழுமையாக நேரவில்லை. ஆதலால் தமிழ்ப்பணியே என நடுவர் தீர்ப்புரைத்தார். 

தமிழ்ச் சங்கப் பதில் செயலர் லோ.துஷிகரன் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்விற்கான அனுசரணையை யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவனத்தினரும் மண்டபத்திற்கான அனுசரணையை யாழ். மாநகரசபையினரும் வழங்கினர்.

நிகழ்வைக் கௌரவப்படுத்தும் முகமாக ஆறுமுகநாவலர் என்ற நாவலர் சரிதம் உரைக்கும் நூலை யாழ். கரிகணன் பதிப்பகத்தினர் இலவசமாக வெளியீடு செய்தனர். அத்துடன் நாவலரின் படம் பொறித்த வண்ண நாள்காட்டியை கலந்து கொண்ட யாவருக்கும் இலவசமாக வழங்கினர். 

நிகழ்வு இடம்பெற்ற  நாவலர் கலாசார மண்டபம் ஆறுமுகநாவலரின் வீடு அமைந்திருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

1425633_10152397536325744_910719358_n946063_10152400225135744_1176082693_n 993743_10152400224465744_1695384888_n 1422452_10152400225000744_816772776_n
1441293_10152400227710744_596965576_n 1452161_10152400224295744_593016085_n 1452257_10152397536330744_1906117335_n 1459926_10152400224000744_316085550_n 1467192_10152400225225744_931758844_n 1467403_10152397537270744_1652495585_n 1476656_10152400228025744_695660656_n 1476156_10152397536810744_985032012_n unnamed

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux