நல்லூர் முருகனின் பாதுகாப்புக்காக,பொருத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரங்கள் அகற்றப்பட்டதாக அறிவிப்பு-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் முருகனின் பாதுகாப்புக்காக,பொருத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரங்கள் அகற்றப்பட்டதாக அறிவிப்பு-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர்.

ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன

அவை நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால் அவற்றை இன்றைய தினம் காலை மீண்டும் எடுத்து சென்றுள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux