உழைத்து வாழத்துடிக்கும் கைதடி விழிப்புலன் இழந்தோர் இல்லத்தில் -அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

உழைத்து வாழத்துடிக்கும் கைதடி விழிப்புலன் இழந்தோர் இல்லத்தில் -அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

561990_591312240917982_404933963_n

யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்களின் கைத்தொழில் பூங்காவிற்கு அல்லையூர் இணையத்தின் செய்தியாளர் அண்மையில் சென்றிருந்தார்.அவர் அங்கு பார்த்து தெரிவித்த தகவல்கள் எம்மை ஆச்சரியப் படவைத்தன.

விழித்திரை முழுவதுமாக மறைக்கப்பட்ட இவர்கள்-உறுதியோடு கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்து வருவது ஆச்சரியமாகவே உள்ளது.இங்கு பெண்களும்-ஆண்களும் வேறு வேறு பிரிவுகளில் கைத்தொழிற்பொருட்களை   உற்பத்தி செய்கின்றனர்.இங்கு தயாரிக்கப்படும்  பொருட்கள் பின்னர் யாழ் மாவட்ட விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இவர்களுக்காகவும்-இவர்களை நிர்வகிப்பதற்காகவும்-  மிகத்திறமையுடன் செயற்பட்டு வருகின்றது -யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர் சங்கம்-இச்சங்கத்தின் உறுப்பினர்களும் விழிப்புலன் இழந்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

                                          அல்லையூர் இணையத்தின் வேண்டுகோள்

கைதடியில் அமைந்துள்ள இக்கைத்தொழில் பூங்காவில் 23 விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கின்றார்கள்-இவர்கள் பயன் படுத்தி வரும் சமயலறை மிக மோசமாக பழுதடைந்து காணப்படுகின்றது.அவர்களின் உருக்கமான வேண்டு கோளை ஏற்று-அதனை புனரமைத்து தருவதாக அல்லையூர் இணையம் உங்களை நம்பி உறுதியளித்துள்ளது.இதனை புனரமைப்பு செய்வதற்கான செலவு 50 ஆயிரம் ரூபாக்கள் வரை தேவைப்படலாம் என்று அவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.

இத்தகவல்களை கேட்டறிந்து கொண்ட நம்ம ஊரைச் சேர்ந்த  இரு கருணை உள்ளம் கொண்டவர்கள் மொத்தம் 30ஆயிரம் ரூபாக்களை வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளனர். நீங்களும் மனமிரங்கி உதவிட விரும்பினால்…..

                                    இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்!

                                                                    0033651071652

1063072_1419026194993278_1346551905_n 1384750_1419026368326594_1587303760_n 1421345_1419026788326552_1364342569_n 1421577_1419026824993215_998348975_n (1) 1415644_1419026631659901_1890250239_n 1418322_1419337748295456_2039847744_n 1462060_1419026774993220_1484422851_n 1462088_1419026514993246_2126665988_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux