புங்குடுதீவில் அகாலமரணமான,சமூகத்தொண்டர் அமரர் சசிதரன் அவர்களின்  இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு!

புங்குடுதீவில் அகாலமரணமான,சமூகத்தொண்டர் அமரர் சசிதரன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு!

தீவகம் புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், வேலணையை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. நல்லதம்பி சசிதரன் அவர்கள் அரவம் (பாம்பு) தீண்டி, அகால மரணமானார் –

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 04.04.2019 வியாழக்கிழமை அன்று புங்குடுதீவில் நடைபெற்றது.அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

புங்குடுதீவு தபால் அலுவலக உத்தியோகத்தரும், மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய பொருளாளரும், மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் ஆலய பொருளாளரும், புங்குடுதீவு நாகதம்பிரான் ஆலய பொருளாளரும், ஊரதீவு சனசமூக நிலைய உபதலைவருமான “சமூக தொண்டர்” திரு. நல்லதம்பி சசிதரன் அவர்களே 31.03.2019 அன்று (நேற்றிரவு) அகால மரணமானார் எனத் தெரிய வருகிறது.

நேற்றிரவு வயலூர் முருகன் ஆலய திருவிழாவில், தொண்டாற்றி விட்டு வீடு சென்றிருந்த நிலையில், சிறுநீர் கழிப்பதற்காக,வெளியில் வந்தபோது-காலில் மிதிப்பட்ட பாம்பு தீண்டியதாகவும்,இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாகவும்-எமது இணையத்திற்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திரு. நல்லதம்பி சசிதரன் அவர்கள்,கொலண்டில் வசிக்கும், திரு நல்லதம்பி யோகராசா அவர்களின் அன்புச்சகோதரரும்,மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி ராதா யோகராசா அவர்களின் அன்பு மைத்துனருமாவார்.பு

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux