இயற்கையும்,தொன்மையும்,நிறைந்த கௌதாரிமுனையை, பாதுகாப்போம்-அங்கஜன் இராமநாதன்

இயற்கையும்,தொன்மையும்,நிறைந்த கௌதாரிமுனையை, பாதுகாப்போம்-அங்கஜன் இராமநாதன்

பூநகரி பிரதேச பரப்பில், கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு பரப்பாக காணப்படுகின்றது.

எனவே மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு,ஒரு பெரிய நிலப்பரப்பு கடல் காவு கொள்ளும் நிலைமையினையும் நாம் தவிர்த்துகொள்ளலாம்.

விசேடமாக கண்டல் தாவரங்கள்,மணல் மேடுகள்,பனைகள் என சுற்றுலா பிரதேசத்துக்குரிய சிறப்புக்களை கௌதாரிமுனை பிரதேசம் கொண்டுள்ளது

இப் பிரதேச மக்கள் விவசாயம், கடல் தொழில் மற்றும் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதோடு, இப் பிரதேசத்தை பாதுகாத்து சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தினால் பிரதேச மக்களும் வருமானங்களை ஈட்டக்கூடியதாக இருக்கும், எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பள்ளிகுடாவிலிருந்து ஞானிமடம் வரையிலான கடற்கரை பகுதியில், அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாகவும் , பிரதேச மக்களின் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் தொடர்பான கருத்துக்களை அங்கஜன் இராமநாதன் கேட்டறிந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

115 குடும்பங்களைச் சேர்ந்த 386 பேர் வரையிலானோர் வசிக்கும் கௌதாரிமுனை கிராமம்  வளமாக்கப்பட வேண்டும்.அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் ஆரம்ப காலங்களில் வசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொன்மையும் இயற்கை அழகும் உள்ள பிரதேசம் விடயத்திற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கைகள் எடுக்க உறுதி செய்யப்படும்.அதே வேளை இந்து மதத்தின் தொன்மை,பழமை,அருமை,பெருமைகளை உலகறிய செய்வோம்.

ஆரம்ப காலத்தில் பூநகரி இராச்சியமாக  இருந்து இன்று நிலையிழந்து,கலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கம் இன்றி பாதுகாப்போம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux