தேசியமட்டத்தில்  வெண்கலப் பதக்கத்தை, அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது-விபரங்கள் இணைப்பு!

தேசியமட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை, அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது-விபரங்கள் இணைப்பு!


தேசியமட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது.

செயற்பாட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவில் யா/அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் 2018ம் வருடம் தரம்4 மற்றும் தரம்5 வகுப்புகளில் கல்வி கற்று வந்த மாணவர்களின் அணிகள் இரண்டும் -தீவக வலயத்தில் போட்டியிட்டு முதல் நிலைக்கு தெரிவாகி வடமாகாணத்தில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு பற்றி முதல்நிலைக்கு தெரிவாகி பின்பு தேசிய மட்டத்திற்கு முன்னேறினார்கள்.

இத்தேசிய மட்டப் போட்டியானது. கடந்த 09-10-11/03/2019 நாட்களில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றி இவ்விரண்டு அணிகளு்ம் வெண்கல பதக்கத்தை தனதாக்கி கொண்டு மாவட்டத்திற்கும் குறிப்பாக தீவகத்திற்கும் பெருமை
சேர்த்துள்ளனர்.
இச்சிறார்களை நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux