யாழ் தீவகத்தில்,சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

தீவக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு , கடத்தப்படுதல் , கற்றாளைகள் தீவகத்தில் இருந்து கடத்தப்படுதல் மற்றும் போதைவஸ்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 

குறித்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த தீவகத்தில் அராலி சந்தி , வங்களாவடி பகுதிகளில் பொலிஸ் காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இன்றைய (12.03.2019 )தினம் செவ்வாய்க்கிழமை பிரதிப்பொலிஸ் மா அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

நன்றி-வீரகேசரி இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux