வேலணையில் ஞாயிறுதோறும் தீவக மாணவர்களின் நலன்கருதி நடைபெற்றுவரும்- விஷேட வகுப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணையில் ஞாயிறுதோறும் தீவக மாணவர்களின் நலன்கருதி நடைபெற்றுவரும்- விஷேட வகுப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!


தீவகம் வேலணை விடிவெள்ளி அமைப்பின் கல்வி வளர்ச்சி பிரிவினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயல்ப்படுத்தப்படும் செயல்ப்பாட்டு கருத்தமர்வானது.கடந்த 17/02/209 தொடக்கம் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரைக்கும் யாழ் முன்னனி வளவாளர் திரு திலக் ஆசிரியர் அவர்களால் நடாத்தப்படுகின்றது.

இவ்செயற்பாட்டு கருத்தமர்வு வகுப்பில் தீவகத்தை சேர்ந்த மண்டதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், வேலணை, சரவணை ,சுருவில், நரந்தனை, கரம்பன், பருத்தியடைப்பு, மெரிஞ்சிமுனை, புங்குடுதீவு, முதலான பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும், யாழ் நகரை சேர்ந்த பாடசாலையின் மாணவர்கள் சிலருமாக நூற்றிமுப்பது வரையான மாணவர்கள் கலந்து பயன் பெற்றுவருகின்றனர்.

இன்றும் (24/02/2019) இரண்டாவது நாளாக செயற்பாட்டு கருத்தமர்வானது நடைபெற்றது.
இன்றைய நிகழ்வுக்கான நிதியனுசரனையை, அன்னை பராசத்தி அறக்கட்டளையினர் (பிரான்ஸ்-வேலணை) அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினூடாக வழங்கியுதவினார்கள் . மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் மற்றும் மதிய சிறப்புணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்நிதியுதவியை செய்த கொடை வள்ளல்களுக்கு வேலணை விடிவெள்ளி அமைப்பினரும் மாணவர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர். மேலும் இச் செயல்ப்பாட்டு கற்றல் செயலமர்வானது தொடர்ந்தும் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறுமென வேலணை விடிவெள்ளிகள் அமைப்பின் அமைப்பாளர் திரு ப.காசி அவர்கள் (லண்டன் ) அறியத்தருகின்றார்.
இக்கல்விப்பணிக்கு தொடர்ந்தும் அனுசரணை வழங்க சமூக ஆர்வலர்கள் முன்வருமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux